தமிழகத்தில் உர விற்பனை 40% சரிவு... மழையின்றி வாடும் விவசாயிகள்!

 
உரம்

 

தமிழகம்: தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் நடப்பாண்டில் நெல் சாகுபடி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Low monsoon rains pull down fertiliser sales in August, but urea import costs ease, ETAgriculture

தமிழகத்தின் முக்கிய விவசாய ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் கிடைக்காதது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனுடன் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால் பல பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைவதால் உரங்களின் விற்பனை அதிகரிக்கும். இதனால் இந்த ஆண்டும் உர விற்பனை சீராகும் என விற்பனையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

Tamil Nadu farmers fight drought with organic farming - Vikalp Sangam

ஆனால், மழை பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. இதன் காரணமாக யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களின் தேவை குறைந்து விற்பனையும் சரிந்துள்ளது.ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில், உர விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு வேளாண் துறையில் நிலவும் பாதிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.