சவுதி கடற்பகுதியில் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் பலி; 3 பேர் காயம்!

 
மீனவர்

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் இத்தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

க்ஃப்

ஆகஸ்ட் 10-ம் தேதி சவுதி அரேபியக் கடல் பகுதியில் மாவீரன் உள்ளிட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

க்ச்ஃப்க்

இந்தக் கொடூரத் தாக்குதலில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் படகிலிருந்த மேலும் 3 மீனவர்கள் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேசக் கடலோரக் காவல் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.