தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல்? வாக்குச்சாவடிகள் தயார்; தேர்தல் ஆணையம் தீவிரம்!

 
தேர்தல்

 

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள்தான் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. இந்தத் தொகுதிகள் காலியானது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் இடைத்தேர்தல் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்தில் இப்பணிகள் முடிவடைந்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கான புதிய பட்டியலில் 56 வாக்குச்சாவடிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும், தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப