தமிழகம் முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இனி இலவச மருத்துவம்... தமிழக அரசு குட்நியூஸ்!

 
முதியவர்கள்

 

தமிழகத்தில் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 38 லட்சம் முதியவர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயன்பெற உள்ளனர்.

70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு இனி இலவச மருத்துவச் சிகிச்சை.. 38 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ...

புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான உயர் மருத்துவ சேவைகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும். வருமான வரம்பு இல்லை என்பதால் அனைத்துத் தரப்பு முதியவர்களும் எளிதாகப் பயனடைய முடியும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் முதியவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மற்றும் காப்பீட்டுப் பதிவு மையங்களை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம்.முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது