தமிழகத்தின் 4 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் அறிவிப்பு... தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை!
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, இத்தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் ராஜினமாக்களைத் தொடர்ந்து, காலியாக உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளைத் தேர்தல் ஆணையம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தேர்தல் களம் மற்றும் அரசியல் கூட்டணிகளின் வியூகங்கள் என இத்தொகுதிகளில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் விரைவில் சூடுபிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
