தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 சரிவு... ரூ.92000/- க்கு விற்பனை!

 
தங்கம்

 

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்து, சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்தது.

தங்கம்

இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.470 குறைந்து ரூ.11,510 ஆக உள்ளது.கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15 ஆயிரம் வரை சரிந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவது தங்கம் வாங்கத் திட்டமிடுவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கம் தங்கத்தின்

இதற்கிடையே, வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.