16 நாட்கள் சரிவுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... வாரத்தின் முதல் நாளில் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 

தமிழகத்தில் கடந்த 16 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் இந்த திடீர் விலை உயர்வு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

அதன்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து, இன்று ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.