தொடர் சரிவில் தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு ஆறுதல் அளித்துள்ளது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாகச் சரிந்துள்ளது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.95 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.760 சரிந்து, விலை ரூ.1,08,720 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் தற்போதைய விலையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
