குட் நியூஸ்! ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 
குட் நியூஸ்! ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்தவும், நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து மீண்டும் பயோமேட்ரிக் மூலம் ரேஷன் பொருட்களைத் தரும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்! ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இணையவழியில் புகாரளிப்பதில் சிரமம் இருப்பதாலும் , தமிழகத்தின் கடைக்கோடி மக்களும் எளிதாக பிரச்சனைகளை தெரிவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நியாயவிலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையான பணியாளர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

From around the web