அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி மாயம்! சைபர் குற்றவாளிகளின் புதிய குறி – அதிர்ச்சியில் அதிகாரிகள்!

 
பணம்

  தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அரசு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மாயமான சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.3.10 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.5 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி

இந்தப் பணம், மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் கிராமப்புறங்களில் சுகாதார நல மையங்களைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியாகும். இதற்கான பணப் பரிவர்த்தனைகள் மாநில அளவிலான வங்கிக் கணக்கு மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், இணையவழியாக வங்கிக் கணக்குகளில் ஊடுருவி பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நைஜீரிய சைபர் குற்றக் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது, எவ்வளவு தொகையை மீட்க முடியும் என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது