தமிழக ஆளுநர் அர்லேகர் அமித் ஷாவுடன் சந்திப்பு … டெல்லி பயணத்தில் முக்கிய ஆலோசனை!

 
அர்லேகர்

 

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதற்காக இன்று (நவம்பர் 13) டெல்லி செல்கிறார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆளுநர் அர்லேகர் டெல்லி பயணம்: தமிழ்நாடு சட்ட ஒழுங்கு அறிக்கை கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா? - governor arlekar delhi visit nov 13th for minister amit shah seek tamil nadu ...

தமிழகத்தில் சமீபகாலமாக நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள், தீபாவளி நாளில் பதிவான உயிரிழப்புகள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறுவதால், தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இது வழக்கமான நிர்வாக ரீதியிலான சந்திப்பு என்றும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயணம் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Arlekar to brief Shah on TN law and order; Centre keenly watching developments

அமித் ஷாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு ஆளுநர் அர்லேகர் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர், நவம்பர் 15-ம் தேதி சென்னை திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.