2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு!
2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையைத் தலைமைச் செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த விடுமுறைப் பட்டியல், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாகும்.
2027 பொது விடுமுறை பட்டியல்:
ஜனவரி 01 (வெள்ளி) - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 (வெள்ளி) - பொங்கல்
ஜனவரி 16 (சனி) - திருவள்ளுவர் நாள்
ஜனவரி 17 (ஞாயிறு) - உழவர் திருநாள்
ஜனவரி 22 (வெள்ளி) - தைப்பூசம்
ஜனவரி 26 (செவ்வாய்) - குடியரசு நாள்

மார்ச் 10 (புதன்) - ரம்ஜான்
மார்ச் 26 (வெள்ளி) - புனித வெள்ளி
ஏப்ரல் 01 (வியாழன்) - வங்கி கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும்)
ஏப்ரல் 07 (புதன்) - தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 14 (புதன்) - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்
ஏப்ரல் 19 (திங்கள்) - மகாவீர் ஜெயந்தி
மே 01 (சனி) - மே நாள்
மே 17 (திங்கள்) - பக்ரீத்
ஜூன் 15 (செவ்வாய்) - மொகரம்
ஆகஸ்ட் 15 (ஞாயிறு) - சுதந்திர நாள்

ஆகஸ்ட் 25 (புதன்) - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 04 (சனி) - விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 02 (சனி) - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 08 (வெள்ளி) - ஆயுத பூஜை
அக்டோபர் 09 (சனி) - விஜயதசமி
அக்டோபர் 28 (வியாழன்) - தீபாவளி
டிசம்பர் 25 (சனி) - கிறிஸ்துமஸ்
