பாடகர் வேல்முருகனுக்கு 'அறங்காவலர்' தேர்வுக் குழுவில் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு!

 
வேல்முருகன்

ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருவாய் உள்ள திருக்கோயில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யத் தமிழக அரசு அமைத்துள்ள தேர்வுக் குழுவில் பிரபலப் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்தச் சிறப்புக் குழுவில் பாடகர் வேல்முருகனுடன் சேர்த்து, திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் சுமதிஸ்ரீ ஆகியோரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மாநிலத்தின் அதிக வருவாய் ஈட்டும் முக்கியக் கோயில்களுக்குத் தகுதியான அறங்காவலர்களைக் கண்டறிந்து நியமிக்கும் பணியை இக்குழு மேற்கோள்ளும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பாடகர் வேல்முருகன் பங்கேற்றுப் பாடியிருந்தார்.

அப்போதைய நிகழ்வில் முருகப்பெருமானுக்கான பிரசித்தி பெற்ற பக்திப் பாடலின் வரிகளை மாற்றி, விஜய்யை மையப்படுத்தி அவர் பாடியது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.