“கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம்" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

 
கரூர்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர், கரூரில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் அரசுப் பணி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அன்றைய தினம் திரண்ட பெருந்திரளான கூட்டத்தைக் காவல்துறையினர் சரியாகக் கையாளாததும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியதுமே இந்த துரதிர்ஷ்டவசமான 41 உயிர்களின் இழப்புக்கு முதன்மைக் காரணம்.

கரூர் விஜய்

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டே அவர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக விசாரணையை ஒத்திவைத்துள்ளது.