தகவல் அறியும் உரிமைச் சட்ட விலக்கு உத்தரவு ரத்து - தமிழக அரசு புதிய அரசிதழ் வெளியீடு!

 
ஆர்டிஐ தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தமிழ்நாடு அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு வழங்கப்பட்டிருந்த விலக்கு உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு புதிய அரசிதழை வெளியிட்டுள்ளது.

முன்னதாகப் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் எதிர்கொண்டது. இதன் காரணமாகப் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் எழுந்த எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அரசு அந்த முந்தைய உத்தரவைத் தற்போது அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

இந்த விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் மீண்டும் பொது சட்டம் ஒழுங்கு துறை தொடர்பான விவரங்களையும் தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.