FL-3 பார் உரிமங்களை 50% அபராதத்துடன் புதுப்பிக்க கூடுதல் அவகாசம் - தமிழக அரசு அரசாணை!

 
பார்

தமிழ்நாட்டில் நட்சத்திர விடுதிகளில் இயங்கும் FL-3 பார் உரிமங்களை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டிற்கான FL-3 பார் உரிமங்களை கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறிய உரிமையாளர்கள் இதன் மூலம் பயனடைவர். உரிமத்தைப் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதி வரை தங்களது பார் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மது சரக்கு பார்

உரிய புதுப்பித்தல் உரிமக் கட்டணத்துடன், கூடுதலாக 50 சதவீத அபராதத் தொகையைச் செலுத்தி ஜூலை 31-ம் தேதிக்குள் பார் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இத்தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசிதழில்  வெளியிட்டுள்ளது.