ஆறுகளைச் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

 
சென்னை ஆறு ஆறுகளைச் சீரமைக்க சீரமைப்பு

சென்னையின் முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களை முழுமையாகச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

நகரத்தின் முக்கிய நதிகள் மற்றும் கால்வாய்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்கும் இந்தத் திட்டத்திற்காக, சீரமைப்புப் பணிகளுக்கான செலவு, பயன்படுத்தப்பட வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் குறித்த முழுமையான அறிக்கையை உருவாக்குவதற்காக இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆர்வம் உள்ள தகுதியான நிறுவனங்கள் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி காலை 11 மணி வரை அதிகாரப்பூர்வமான tntenders.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.