தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக லில்லி நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக சரவண செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
