ஆசிய விளையாட்டில் சாதித்த ஸ்குவாஷ் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழக அரசு பதவி உயர்வு!

 
ஸ்குவாஷ் ஜோஷ்னா சின்னப்பா

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரபல சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, தமிழக அரசு உயரிய பதவி உயர்வு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த ஜோஷ்னா சின்னப்பா, தற்போது அதே துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஸ்குவாஷ்

ஜப்பானில் அண்மையில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ்னா சின்னப்பா, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.