தமிழக அரசின் வருவாய், செலவு புள்ளிவிவரங்கள் வெளியீடு - ரூ.20,349 கோடி பற்றாக்குறை!

 
தலைமை செயலகம் விஜய்

நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசின் வருவாயைக் காட்டிலும் செலவினங்கள் அதிகமாகியுள்ளதால் கணிசமான அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான முதல் 5 மாதக் காலப்பகுதியில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்

இதே காலகட்டத்தில் அரசின் ஒட்டுமொத்தச் செலவினம் ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயை விடச் செலவு அதிகமாக இருந்ததே இந்த நிதி இடைவெளிக்கு முக்கியக் காரணமாகும்.

வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையேயான இந்தக் கணக்கீட்டின்படி, தமிழக அரசுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.20,349 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகம் லஞ்சம் நிதியுதவி தொகை பணம்

அரசின் தொடர்ச்சியான நிதித் தேவைகளையும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சமாளிப்பதற்காக, கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக ரூ.30,021 கோடி வரை கடன் பெற்றுள்ளதாகவும் அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.