அனைத்து டாஸ்மாக் கடைகள் அருகிலும் தானியங்கி எந்திரங்கள் - தமிழக அரசு புதிய திட்டம்!
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் காலி பாட்டில்களை எளிதில் திரும்பப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் அதிநவீன தானியங்கி எந்திரங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் எனத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

காலி பாட்டில்களை எளிதாகப் பொதுமக்களிடம் இருந்து பெறும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் அருகிலும் ஒரு எந்திரம் வீதம் சுமார் 4 ஆயிரம் அதிநவீன தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எந்திரங்களை நிறுவி இயக்க ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்யும் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன.

ஒப்பந்ததாரர் முழுமையாகப் பணிகளைத் தொடங்கும் வரை, டாஸ்மாக் கடை ஊழியர்களே பொதுமக்களிடம் இருந்து காலி மதுபாட்டில்களை நேரடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
