தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
ரேஷன் கடை

வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுச் செல்லும் வகையில் நாளை நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் (ரேஷன் கடைகள்) வழக்கம் போலச் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் சர்க்கரை

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழக்கமாக மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் பணி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருவதால், பண்டிகைக் காலப் பொருட்களை வாங்குவதற்குக் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் அதிகளவில் குவிவார்கள் என்பதைக் அரசு கருத்தில் கொண்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தடையின்றி முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய, நாளை நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

ரேஷன்

பண்டிகைக்குக் குறுகிய நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசின் இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விடுமுறை நாள் மாற்ற அறிவிப்பு ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் எந்தவித தங்குதடையுமின்றி தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை நாளை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.