எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல 3 மாதங்கள் தடை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

 
எம்-சாண்ட்

சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கட்டிடம் எம்-சாண்ட், பி.சாண்ட்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மாநிலத்தின் கனிம வளங்களைப் பாதுகாக்கவும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்-சாண்ட், ஜல்லி மற்றும் கருங்கல் உள்ளிட்ட கனிமப் பொருட்களைத் தடையை மீறி பிற மாநிலங்களுக்குக் கொண்டு சென்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

எல்லையோர மாவட்டங்களில் கனிமக் கடத்தலைத் தடுப்பதற்காகத் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.