“தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது” - வைகோ பேட்டி!
தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்கள் குறித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும், சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவரவும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காவல்துறைக்குத் தொடர்ந்து பல்வேறு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முந்தைய மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய வைகோ, இவை புதிதாக உருவானவை அல்லாமல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் குற்றச் சம்பவங்களே தவிர வேறு அல்ல என்று விளக்கினார்.
எனவே, தற்போது தொடரும் இத்தகைய குற்றச் சம்பவங்களுக்குத் தவெக அரசு நேரடியாகப் பொறுப்பாகாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
