தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 
தமிழ்நாடு

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 17) பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இடி மின்னல் மழை

சென்னை, செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

மழையுடன் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், நீர்நிலைகள் அருகே செல்வோர் மற்றும் மழையின்போது பயணம் மேற்கொள்பவர்கள் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். வானிலை நிலவரம் மாறக்கூடும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.