தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்!
Aug 26, 2026, 20:10 IST
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தப் பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்வார்கள் எனத் துறைசார் செயலாளர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ். மணிக்குமார் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
