தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தனுக்கு மத்திய அரசின் சிறப்புப் பதக்கம்!

 
ஐபிஎஸ் அரவிந்தன்

போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தீவிர விசாரணையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி பி.அரவிந்தனுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, "விசாரணையில் சிறந்து விளங்குபவருக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்" ஐ.பி.எஸ் அதிகாரி பி.அரவிந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான அரவிந்தன், தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றியவர்.

அரவிந்தன் தற்போது மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் சென்னை மண்டல கூடுதல் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, பல்வேறு முக்கிய வழக்குகளை வெற்றிகரமாகப் புலனாய்வு செய்தமைக்காக அவருக்கு இந்த உயரிய மத்திய அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.