கொலை நகரமாகும் தமிழகம்... 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 8 கொலைகள் - பீதியில் பொதுமக்கள்!

 
கொலை போலீசார் விசாரணை படுகொலை வெட்டிக்கொலை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து அரங்கேறிய எட்டுப் படுகொலைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

கொலை போலீசார் விசாரணை படுகொலை வெட்டிக்கொலை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு நாளுக்குள் நிகழ்ந்த அடுத்தடுத்த கொலைகள் மக்களைப் பீதியடையச் செய்துள்ளன. குறிப்பாக, மதுரை காவல் நிலையம் அருகே சப்பாணி சரவணன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், கன்னியாகுமரியில் ஆல்வின் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு மற்றும் மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்பவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டது, கன்னியாகுமரியில் இரட்டைக் கொலைகள் உள்ளிட்ட தொடர் குற்றச் சம்பவங்கள் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

இச்சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்த அந்தந்தப் பகுதி காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடங்களுக்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இத்தொடர் கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.