தமிழகமே எதிர்பார்ப்பு... கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு.. கதறும் உறவினர்கள்!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சரியாக இன்று மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், தற்போது நீதிமன்றத்தில் இறுதி கட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சதீஷ், கார்த்திக் மற்றும் குணா ஆகிய மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி வி. சுந்தர்ராஜ் தனது இருக்கைக்கு வந்துள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கோடு தொடர்புடையவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நீதிபதி வழக்கின் பின்னணி மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைச் சுருக்கமாக வாசித்து வருகிறார். இதற்குப் பிறகுதான் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.
பொதுவாக இது போன்ற முக்கிய வழக்குகளில், நீதிபதி தனது தீர்ப்பை முழுமையாக வாசிப்பதற்கும், தண்டனை காலத்தை அறிவிப்பதற்கும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகலாம். எனவே, இன்னும் சில நிமிடங்களில் முழுமையான தீர்ப்பு விபரம் வெளியாகிவிடும்.

மாணவி வன்கொடுமை வழக்கில் கொடூரமாக செயல்பட்ட 3 பேரும் உச்சபட்ட தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். குற்றவாளிகள் மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு முன்னதாக ஒரு கொலையும் செய்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததால், உச்சபட்ட தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
