தமிழகமே பரபரப்பு... மீனாட்சியம்மன் கோவிலருகே 17 வயது சிறுவன் படுகொலை - உடலை முதல் தளத்தில் இருந்து கீழே வீசிச் சென்ற ரவுடி கும்பல்!

 
மதுரை மீனாட்சி மீனாட்சியம்மன் மதுரை மீனாட்சி மீனாட்சியம்மன்

தமிழகத்தின் முக்கியப் பண்பாட்டு மையமாகவும் விளங்கும் மதுரை மாநகரின் மையப்பகுதியில், அதுவும் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகிலேயே அரங்கேறியுள்ள துணிகரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் ரவுடி கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தை ஒட்டி, தூங்காநகரத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான நவீன வாகன காப்பக வணிக வளாகம் இயங்கி வருகிறது. இவ்வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில், நேற்று நள்ளிரவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பயங்கர  ஆயுதங்களுடன் அங்கு வந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பல், தூங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சூழ்ந்து கொண்டது. தப்பியோட முயன்ற அவனைக் கண்மூடித்தனமாகத் தலை, கழுத்து உள்ளிட்ட உடல் பாகங்களில் அந்தப் பயங்கரவாதக் கும்பல் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

அத்தோடு நிறுத்தாமல், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அந்தச் சிறுவனின் உடலை, அந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இருந்து நேராகக் கீழே வீசி எறிந்துவிட்டு, எவ்வித அச்சமுமின்றி அந்த ரவுடி கும்பல்  வேகத்தில் தப்பியோடியது.

இன்று அதிகாலை நேரத்தில் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக எறியப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், உடனடியாக மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு  வேகத்தில் விரைந்து வந்த மாநகரக் காவல் துணை ஆணையர் மற்றும் போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்தச் சிறுவன் மீது ஏற்கனவே மதுரை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

கஞ்சா விற்பனை மற்றும் ரவுடி கும்பல்களுக்கு இடையே நிலவி வரும்முன்பகை அல்லது பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்று போலீஸார் பலமாகச் சந்தேகிக்கின்றனர். வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் விளக்குத்தூண் போலீசார், தப்பியோடிய 5 பேர் கொண்ட கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவத்தால் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.