தமிழகமே அதிர்ச்சி... திருவொற்றியூரில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - வடமாநில இளைஞர்கள் வெறித்தனம்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் 6 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டின் மேல்தளத்தில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அதே பகுதியில் இருந்த 6 வயது சிறுமியைத் திட்டம் தீட்டிக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பிய பிறகு, தனக்கு நடந்த கொடுமைகளைத் தெரிவித்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், சித்தரஞ்சன் மற்றும் மனோஜ் ஆகிய 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார்.

குற்றவாளிகளில் மனோஜ் என்பவர் உடனடியாகத் தப்பியோடிவிட்டார். தலைமறைவாக முயன்ற மற்ற இருவரான ராகுல் மற்றும் சித்தரஞ்சன் ஆகியோரைப் பிடித்த அப்பகுதி பொதுமக்கள், ஆத்திரத்தில் அவர்களைக் கடுமையாகத் தாக்கி ரத்தக் காயங்களுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தப்பியோடிய மனோஜைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
