தமிழகத்தில் இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை? அடுத்த 15 நாட்களுக்கு மழை ... பிரதீப் ஜான் கணிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தினமும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் மழை கிடைக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார். இதனால், அடுத்த இரண்டு வாரங்களில் வானிலை ஒரே மாதிரியாக இல்லாமல் மழையும் வெயிலும் மாறி மாறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இருப்பினும், மழையின் தீவிரம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
