தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (அக். 20) சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
