தமிழகத்தில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறு விடுப்பு... முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

 
vijay

 

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்கள் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News Alert! Tamil Nadu CM Vijay announces paternity leave for male govt employees Male employees will get 15 days' paternity leave: Tamil Nadu govt Male govt staff may avail the paternity leave,

குழந்தை பிறக்கும் காலத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு அளிப்பதோடு, குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் நிலையில், ஆண் ஊழியர்களும் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள இது உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

United News of India on X: "🚨#NewsAlert | Tamil Nadu Chief Minister C Joseph Vijay has announced the introduction of paternity leave for male employees working in the Tamil Nadu Government for

இந்த 15 நாட்கள் விடுப்பைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளலாம் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்த அறிவிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.