தமிழகத்தில் போலீசார் தீவிர சோதனை: 350-க்கும் மேற்பட்டோர் கைது!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தின. தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சென்னையில் 185 ரவுடிகள் உள்பட 222 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கையில் ஒரே இரவில் 43 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன், 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் ஒரே இரவில் 33 ரவுடிகள் உள்பட 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குற்றச்செயல்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்கவும் போலீசாரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
