தமிழக அரசியலில் தாமரை மலர வித்திட்ட 'திருக்கோவிலூர் சுந்தரம்' காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
திருக்கோவிலூர் சுந்தரம் தாமரை திருக்கோவிலூர் சுந்தரம் தாமரை

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள், தனது 103-வது வயதில் இன்று (ஏப். 19) காலமானார். அவரது மறைவு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பாஜக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக என்ற கட்சி மக்களிடையே அறியப்படாத காலத்திலேயே, அதன் கொள்கைகளைத் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் சுந்தரம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி போன்ற தேசியத் தலைவர்கள் தமிழகம் வரும்போது, அவர்களின் இந்தி மற்றும் ஆங்கில உரைகளை அப்படியே தத்ரூபமாகத் தமிழில் மொழிபெயர்த்து, மேடைப் பேச்சில் ஒரு புதிய இலக்கணத்தையே படைத்தவர்.

அத்வானி

அவரது கணீரென்ற குரலும், தெளிவான மொழிபெயர்ப்பும் தேசியத் தலைவர்களின் எண்ணங்களைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ள உதவியது. கொள்கை பிடிப்பு கொண்ட ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த அவர், தற்போதைய தலைமுறை பாஜகவினருக்கு ஒரு ஆசானாகவே பார்க்கப்படுகிறார்.

திருக்கோவிலூர் சுந்தரம் அவர்களின் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

"தமிழகத்தில் பாஜக இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு விதை போட்டவர்களில் சுந்தரம் ஐயா மிக முக்கியமானவர். அவரது மறைவு கட்சிக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கே ஒரு பேரிழப்பு" எனப் பாஜகவினர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். 103 ஆண்டுகள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த ஒரு அரசியல் சகாப்தத்தின் பயணம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.