இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்? முழு விவரம்!
தமிழகத்தில் இன்று நவம்பர் 27-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையற்ற மின் விநியோகம் மற்றும் மின் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் மாதாந்திர மற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ், அரசூர் மற்றும் படுவம்பள்ளி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படும். சேலம் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் பாளையம், ராமகிரி, கூடலூர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, கரம்பயம் பகுதிகளிலும், நாமக்கல் சோழசிராமணி பகுதிகளிலும், விருதுநகர் மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகள் மற்றும் மின்சாதனங்களின் பயன்பாட்டை அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
