மின்சார கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.35-ஆ? திமுக முன்னாள் அமைச்சர் சராமாரி கேள்வி
தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நிர்வாகத் தோல்வியா, ஊழலா?” – பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்
தனது எக்ஸ் தளப் பதிவில், குறைந்த விலையில் செய்யப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். இது நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியா அல்லது ஊழலா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சாரத் தேவையை ஈடுகட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மின்சாரக் கொள்முதல் விலை மற்றும் முந்தைய ஒப்பந்தங்கள் தொடர்பான விமர்சனங்கள் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
