தமிழகம், புதுச்சேரி பிளஸ்-2 தேர்வுகள் நிறைவு: 60,095 மாணவர்கள் 'ஆப்செண்ட்' - 44 பேர் காப்பியடித்துப் பிடிபட்டனர்!

 
தேர்வு தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பங்கேற்காத மாணவர்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியலைத் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ளார்.

தேர்வுத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இத்தேர்வில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது: 48,532 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. தனித்தேர்வர்கள் 11,563 பேர் பங்கேற்கவில்லை. ஒட்டுமொத்தமாகச் சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் (பள்ளி + தனித்தேர்வர்கள்) தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

தேர்வுத் தரக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும் படைகளின் தீவிரக் கண்காணிப்பையும் மீறி, மாநிலம் முழுவதும் 44 மாணவர்கள் தேர்வுக் காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டுப் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தொடங்கப்பட உள்ளன. மே மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு

அதிகப்படியான மாணவர்கள் தேர்வில் பங்கேற்காததற்கான காரணங்கள் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாகக் கிராமப்புறங்களில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறவுள்ளது.