அலெர்ட்... தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு!
Nov 9, 2026, 17:30 IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 9) இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய முன்னறிவிப்பில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்
