தமிழகத்தில் 31 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
Oct 25, 2026, 08:10 IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 25) காலை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
