இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழை... பட்டியல் இதோ!
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சூழல் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யும் நிலை தொடர்கிறது. உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

செப்.13 மற்றும் 14-ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் செப்.15-ம் தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
