தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

 
வெங்காயம்

 வெங்காயம் விற்பனை விவகாரத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பணியாளர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ரேஷன் கடைகளுக்கு தரமற்ற வெங்காயத்தை அனுப்பிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.