தமிழக ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை - புகார் எண் அறிவிப்பு!

 
வெங்காயம்

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் மூன்றாம் கட்டமாக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் வெங்காயம்

சென்னையில் நேற்று முதல் இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் இன்று முதல் குறைந்த விலையிலான வெங்காய விற்பனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்குக் அதிகபட்சமாக 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும்.

வெங்காயம்

வெங்காய விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்க 96005 61969 என்ற வாட்ஸ்அப் எண் கூட்டுறவுத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.