தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!
Oct 23, 2026, 16:10 IST
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளுக்கு இன்று (அக். 23) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து, உள்ளூர் நிர்வாகத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
