ஒரே நாளில் 253 பேருக்குத் தொற்று உறுதி - தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - மொத்த பாதிப்பு 3096 ஆக உயர்வு!
Sep 19, 2026, 10:40 IST
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நேற்று முன்தினம் 244 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நேற்று வரை மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,096 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவுமான நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
