தமிழ்நாட்டில் ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் - ஒட்டுமொத்த பாதிப்பு 17,348 ஆக உயர்வு!

 
டெங்கு

தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

டெங்கு

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஒட்டுமொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 17,348 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் டெங்கு

டெங்கு தவிர்த்து, மாநிலத்தில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் தற்போது 4,653 ஆக உயர்ந்துள்ளது. காய்ச்சல் பரவல் எதிரொலியாக மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.