11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள்: ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

 
hero

 

தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில், குறைந்த விலையைச் சமர்ப்பித்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலர்ஃபுல் சர்ப்ரைஸ்: இலவச சைக்கிள் திட்டத்தில் மெகா அப்டேட் - அரசின் பிளான் - tn govt plans to provide free bicycles in new designs with ...

2026-27-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 5,32,388 மிதிவண்டிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஒரு சைக்கிள் ரூ.7,235-க்கும், மாணவிகளுக்கு ரூ.7,476-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. வரி உள்ளிட்ட செலவுகளுடன் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.392 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்? | tamil nadu free bicycle scheme 2026 students ...

மிதிவண்டிகளுடன் தலைக்கவசம், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு ராணுவப் பச்சை நிறத்திலும், மாணவிகளுக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட 150 நாட்களுக்குள் விநியோகத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.