உலக ஸ்கேட்டிங்கில் தமிழக வீரர்கள் சாதனை... முதல்வர் விஜய் வாழ்த்து!

 
ஸ்கேட்டிங்

 

உலக ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆனந்த்குமாருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் லட்சிதா, ருத்வா, பிரகதி ஆகியோருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் எனத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இவர்களின் வெற்றி புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.