10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! மாணவர்கள் கவனத்திற்கு...
தமிழகத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 10-ம் வகுப்பு, பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள இந்தத் தேர்வுகளை மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எப்போது?
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் 2027 மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 அரியர் தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடவாரியான தேர்வு தேதிகள், செய்முறைத் தேர்வு விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான dge.tn.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகும் வகையில் மாணவர்கள் கால அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
